NTK Cadre Murder : நாதக நிர்வாகி கொலைவழக்கில் திடீர் TWIST!பகீர் பின்னணி
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலசுப்ரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர்.
அப்போது காப்பாற்றுங்கள் எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து படுகாயங்களுடன் வந்த பாலசுப்ரமணியன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக எடுத்துச் சென்றனர். மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 4 குற்றவாளிகளை காவல்துறையின் கைது செய்தனர்.