Roja in Tiruchendur : ’’தள்ளியே நில்லுங்க’’முள்ளாய் குத்திய ரோஜா! முகம்வாடிய தூய்மை பணியாளர்

’’தள்ளியே நில்லுங்க’’முள்ளாய் குத்திய ரோஜா! முகம்வாடிய தூய்மை பணியாளர் 

 

தன்னுடன் ஆசையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்த தூயமை பணியாளர் பெண்ணை நடிகை ரோஜா கொஞ்சம் தள்ளியே நில்லுங்க எனக்கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டது விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் வந்திருந்தார். கணவருடன் சுவாமி தரிசனம் செய்த ரோஜா பின்னர் ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசையாய் ஓடிவந்த தூய்மை பணியாளர் பெண்மனி ஒருவரை தள்ளியே நிக்குமாறு ரோஜா கூறி புகைப்பட, எடுத்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரோஜாவை வசைபாடி வருகின்றனர். 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola