Nainar Nagendran | நயினார் டெல்லி விசிட் அமித்ஷாவை சந்திக்க திட்டம் முடிவுக்கு வரும் KAS விவகாரம்?
செங்கோட்டையனின் கட்சிப்பொறுப்புகளை இபிஎஸ் பறித்த நிலையில் நேற்று செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று நயினார் நாகேந்திரனும் டெல்லி செல்ல இருப்பதாகவும் இது தொடர்பான பின்னணியும் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கடந்த 6 ஆம் தேதி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடுவிதித்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன். அப்படி ஒன்றிணைக்கவில்லை என்றால் அவர்களுடன் இணைந்து அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி. மறுபுறம் அதிமுகவை யாருலும் உடைக்க முடியாது என்று இபிஎஸ் சூளுரைத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் செங்கோட்டையனின் கருத்தை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களான ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதேபோல் பாஜக தமிழக தலைவர் நாயினார் நாகேந்திரனும் வரவேற்பு தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் தான் செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றதாக தகவல் வெளியானது. டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது. முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி ஏற்ப்பட்ட நேரத்திலும் செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து இபிஎஸ் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான் இபிஎஸ் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் செங்கோட்டையன் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் இன்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்தினும் டெல்லிக்கு விஷிட் அடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் மற்றும் நயினார் நாகேந்திரன் இணைந்து இன்று மீண்டும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் அந்த சந்திப்பில் செங்கோட்டையனை சமாதான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 2026-ல் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அதிமுகவில் எந்த பிரச்சனையில் இருக்க கூடாது என்று பாஜக நினைப்பதாகவும் அதற்காகத்தான் இந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது. செங்கோட்டையனின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.