Modi tea meeting : மோடியின் தேநீர் விருந்து! மீண்டும் அமைச்சராகும் L.முருகன்!எம்.பிக்களுக்கு அட்வைஸ்

Continues below advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கு பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து இன்று அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் எல்.முருகனும் மீண்டும் அமைச்சராவது உறுதியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனிப்பெருன்மை கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறது. பிரதமர் மோடி 3வது முறையாக இன்று பதவியேற்கிறார். இதன்மூலம் நாட்டில் மூன்றுமுறை பிரதமான நேருவின் சாதனையை மோடி சமன் செய்கிறார்.

இன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், குமாரசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மூலம் எல்.முருகன் 2வது முறையாக அமைச்சராவது உறுதியாகியுள்ளது. 

100 நாள் செயல்திட்டம் குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram