Modi Vs Rahul Gandhi | ராம் ராம் சொன்னாலே கைது ராகுலை வம்பிழுக்கும் மோடி தொடரும் சர்ச்சை பேச்சு
"ராம் ராம் சொன்னாலே கைது" ராகுலை வம்பிழுக்கும் மோடி தொடரும் சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'ராம் ராம்' என்று சொல்லும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று மோடி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை நாடாளுமன்ற மக்களவை தேர்தல்தான் தீர்மானிக்க போகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய, வட இந்திய மாநிலங்களை தவிர்த்து தென் மாநிலங்களிலும் கிழக்கில் உள்ள மாநிலங்களிலும் குறிப்பிடுத்தகுந்த வெற்றியை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், அதற்கு இந்தியா கூட்டணியும் பிராந்திய கட்சிகளும் மிகப் பெரிய சவாலாக உள்ளன.
இந்தநிலையில் ஹரியானா மாநிலம் மகேந்திரகாரில் மோடி நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவை இரண்டாகப் பிரித்ததே காங்கிரஸ் கட்சி தான் என்று சாடிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. ஹரியானாவில் ஒவ்வொருவரும் ராம் ராம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு 10 அடி நடந்த பிறகும் மக்கள் 'ராம் ராம்' என்பார்கள் ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்களை கைது செய்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலுக்கு பூட்டு போட வேண்டும் என்று இளவரசர் ராகுல் காந்தி விரும்புவதாக தெரிவித்தார். மக்களின் பக்தியை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது.