BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!

Continues below advertisement


பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ.பி. நட்டாவுக்கு மோடி அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் புதிய தலைவராக யார் வருவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக வரப்போவதாக தகவல் தெரிவிக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு புதிய அரசை பாஜக அமைந்துள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெ.பி. நட்டா. 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு, பாஜக தேசிய தலைவராக பதவி வகித்து வந்த அமித் ஷா, மோடி அமைச்சரவையில் சேர்ந்த பிறகு, நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைய இருந்தது.

ஆனால், மக்களவை தேர்தலை காரணம் காட்டி அவரின் பதவிக்காலம் தேர்தல் முடியும் வரை நீட்டிக்கப்பட்டது. நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் தந்திருக்கும் பட்சத்தில், பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவது உறுதி என தெரியவந்துள்ளது. எனவே, இந்த முறை தென்னிந்தியர் ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உலா வந்தது. இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்தநிலையில் கடந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு இலாகாக்கள் அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் பாஜக தேசிய தலைவராக வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் குழுவில் இருந்து அனுராக் தாக்கூர் விலக்கப்பட்டிருப்பது, இதற்காக தான் என்றும் தற்போது பேசப்பட்டு வருகிறது.


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram