Modi at Bhagavathy amman temple | ”தாயே வெற்றியை கொடு” பகவதி அம்மனிடம் உருகிய மோடி

Continues below advertisement

பிரதமர் மோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம். கோயில் நிர்வாகம் சார்பில் மோடிக்கு பகவதி அம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது. கோயிலில் தரிசனம் செய்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி மாலை வரை பிரதமர் தியானம்.விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் பிரதமர் மோடியும் தியானம்.

கன்னியாகுமரி நடுக் கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் இன்று மோடி தியானம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய கடற்படையின் அதி உச்சமான கமாண்டோ படையான மார்க்கோஸ் படை வீரர்கள் எனப்படும் முதலை வீரர்கள் 30 பேரை பாதுகாப்புகாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தரை, வான் மற்று, கடற்பரப்பு என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொருமுறையும் புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று, தியானத்தில் ஈடுபடுவதை மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். அவ்வகையில் நடப்பாண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், மோடி தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, தேர்வு செய்துள்ள மோடி 30ஆம் தேதி பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு  தனி விமானத்தில் வரும் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்பிட்டரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு, அங்கு மாலை 4.35 மணிக்கு சென்றடைகின்றார். அதன் பின்னர் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் அங்கு மறுநாள் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார். 31ஆம் தேதி முழுவதும் தியானத்தில் ஈடுபடுவதுடன், ஜூன் மாதம் 1ஆம் தேதி காலை வரை தியானத்தினைத் தொடர்கின்றார். அதன் பின்னர் ஜீன் 1ஆம் தேதி பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றார். 

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். அதுபோலவே தற்போது.. மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற ஜுஸ் உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.. விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று மோடி விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

தற்போது நடுக்கடலில் தியானம் இருக்கப் போகும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மார்க்கோஸ் படைப் பிரிவு வீரர்கள் 30 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில்தான் மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதென்ன மார்க்கோஸ் கமாண்டோ படை வீரர்கள் என்கிறீர்களா? இந்திய கடற்படையின் "Marine Commandos" என்ற படைப்பிரிவு வீரர்கள்தான் மார்க்கோஸ் படையணி என அழைக்கப்படுகிறது. இந்தப் படைப் பிரிவு வீரர்கள் கடல்சார் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறவர்கள். நீர் வழி என்றால் வெறும் கடல் மட்டுமல்லாமல்.. பெருவெள்ளத்தோடு சீற்றம் கொண்ட ஆறுகளிலும் நின்றும் பயணித்தும் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் வலிமை பெற்ற படைப் பிரிவு வீரர்கள். ஆதலால்தான் "முதலை வீரர்கள்" என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு போலீசாரைப் பொறுத்தவரை இது சவாலாக உள்ளது. நடுக்கடலில் முக்கிய தலைவர் ஒருவர் 3 நாட்கள் தியானம் செய்வதும். அவருக்கு நடுக்கடலில் பதுகாப்பு தருவதும் இதுவே முதல்முறையாகும். இதானால் கன்னியாக்குமாரி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி தரை, வான் மற்று, கடற்பரப்பு என தமிழ்நாடு போலீஸ் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram