Arvind Kejriwal : ”ஜுன் 4 ஆம் ஆத்மி அரசு கலைக்கப்படும்” பகீர் கிளப்பும் கெஜ்ரிவால்!

Continues below advertisement

ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இருக்காது என அமித்ஷா மிரட்டுவதாக பகீர் கிளப்பியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால்..

 

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கையோடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் பஞ்சாபின் ஜலந்தரில் ரோட் ஷோவி பங்கேற்ற அவர் ஆட்சியை கலைப்பேன் என அமித்ஷா மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..

 

அரவிந்த கெஜ்ரிவால் பேசுகையில் “பஞ்சாபின் 3 கோடி மக்களை பார்த்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுகிறார். ஜுன் 4ம் தேதிக்கு பிறகு மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த பகவந்த மான் தலைமையிலான பஞ்சாப் அரசு களைக்கப்படும் என்கிறார். இது ஒரு சர்வாதிகாரத்தனம். நாட்டு மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நான் உங்களிடம் ஒன்றை கேட்கிறேன், பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளையும் எங்களுக்கு தாருங்கள். உங்களுக்கு நான் உறுதி அளிக்குறேன், பஞ்சாப் மக்களின் குரல் மட்டுமே நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். கடைசி 10 வருடத்தில் நீங்கள் யாரை எல்லாம் தேர்ந்தெடுத்தீர்களோ அவர்கள் உங்களின் குறைகளை தீர்க்கவில்லை.. ஆனால் நான்கள் பஞ்சாபின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்போம், மக்களின் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்போம்” என்றார்.

 

மேலும் “பாஜக அல்லது அகாலி தாலுக்கு வாக்களித்தால் அதனால் எந்த பயணும் இல்லை. ஒருவேலை காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள் என்றால், அவர்கள் எங்களுடன் சண்டையிடுவார்கள். அதனால் 13 தொகுதிகளையும் எங்களுக்கே கொடுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்”

 

முன்னதாக பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, சொன்ன வாக்குறுதிகள் எதையுமே ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை, மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாபை ஊழல் மையமாக மாற்றி வைத்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக 1000 ரூபாய் தரவில்லை, பொதையில்லா மாநிலமாக மாற்றவில்லை, மருத்துவ கல்லூரிகள் திறக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அமித்ஷா.

இந்நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால். ஜுன் 1ம் தேதி 7வது கட்டமாக பஞ்சாபில் தேர்தல் நடைப்பெற இருப்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram