Stalin Stand for Mamata | ”இப்படி தான் நடத்துவீங்களா”களத்தில் இறங்கிய ஸ்டாலின்!மம்தாவுக்கு ஆதரவு..

Continues below advertisement

இதுதான் #CooperativeFederalism?  

ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? என்று நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா புறகணிக்கபட்ட நிகழ்வுக்கு வெகுண்டெழுந்துள்ளார் ஸ்டாலின்..

டெல்லியில் இன்று பிர்தமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து INDIA கூட்டணியை சேர்ந்த பல முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, கர்நாடகா முதல்வர்  சித்தராமையா,  தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் புறகணித்தனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பேன்" என்றார். 

இந்நிலையில், தான் பேசுவதற்கு உரிய நேரம் கொடுக்கவில்லை என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து 'மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  வெளிநடப்பு செய்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் பேச விரும்பினேன், ஆனால் என்னுடைய மைக் அனைக்கபட்டுவிட்டது. என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். ஆனால் மற்ற முதல்வர்கள் 10-20 நிமிடம் வரை பேசினார்கள். எதிர்கட்சிகள் புறகணித்த நிலையிலும் நான் பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச விடாமல் அவமானபடுத்தி விட்டார்கள் என்று தெரிவித்ததிருந்தார்.
 
இந்திலையில் இந்த நிகழ்வை எதிர்த்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “இதுதான் #CooperativeFederalism?  

ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சியில் அனைவரின் குரல்களும் ஒலிக்க வேண்டும், அனைவருக்கும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் மம்தா நிதி ஆயோக்க கூட்டத்திலிருந்து வெளியேறிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram