Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்

Continues below advertisement

உங்களுக்குள்ளே Co-ordination இல்லயே, இப்படி இருந்தா எப்படி மக்கள் பிரச்சனையை தீர்ப்பீங்க என்று அமைச்சர் பொன்முடி அதிகாரிகளிடம் கடுப்பான சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய  நிலையில் உங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழை இருக்கும் என மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்திருந்தது.  இந்நிலையில் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  இன்றும் நாளையும் பலத்த மழை மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என மாநில ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.

 இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்காணம் மருத்துவமனை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூமிஸ்வரம் கோவில், புயல் பேரிடர் கால பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூமிஸ்வரன் கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளிவரும் வடிகால் வாய்க்கால் நீர் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து கேட்ட பொழுது பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் பழனி ஆகியோர் மாறி மாறி குழப்பமாக பதில் அளித்தனர். 

இதைக் கேட்டு கடுப்பான அமைச்சர் பொன்முடி முதலில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் பொதுமக்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் அதிகாரிகளிடம் கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram