TVK Vikravandi Maanadu | ”மாநாடு நடக்குமா புஸ்ஸி?” புலம்பி தள்ளும் விஜய் ஆரம்பமே சறுக்கலா?

Continues below advertisement

பல்வேறு சிக்கல்களை கடந்து விஜய்யின் தவெக மாநாடு வேலைகள் ஆரம்பமான நிலையில், தற்போது கனமழையால் ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த முறையும் மாநாடு தேதி தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக  மாநாடு பேச்சு தொடங்கிய முதலே விமர்சினதிற்குள்ளாகி வருகிறது. மாநாடு பணிகள் அலச்சியமாக செயல்படுவதாமகவும் கூறப்பட்டது. மாநாடு தொடர்பான எந்த தகவலும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை தெரிவிப்பதில்லை, கட்சி தலைமை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து விழுப்புரம் வருகிறோம் தயாராக இருங்கள் என மட்டும் தகவல் சொல்லப்படுகிறது, இடம், நேரம் தெரிவிக்கப்படுவதில்லை. நிர்வாகிகள் காலம், நேரம் தெரியாமல் காத்துக்கிடக்க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் நகரத்திற்கு வந்துவிட்டு நிர்வாகிகளை அழைக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஊடகத்தினரின் நிலைமை இதைவிட மோசம். மாநாட்டு பணிகளில் அப்படி என்ன ரகசியம் என்று தான் புரியவில்லை. 

மாநாட்டுக்கான எந்த வித முன் யோசனையும், முன் தயாரிப்பும் கட்சி தலைமையிடத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டு முகப்பு எப்படி இருக்க வேண்டும், மேடையின் அளவு, எத்தனை லட்சம் தொண்டர்கள் வருவார்கள், தொண்டர்கள் அமரும் இடத்தின் பந்தல் அளவு, எத்தனை இருக்கைகள் போட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எவ்வளவு வாகனங்கள் வரும். அதனை நிறுத்துவதற்காக இடம். வாகனங்கள் நெரிசலின்றி வந்து செல்ல வழி. உணவு, கழிவறை என இந்த பட்டியல் இன்னும் நீளும். இப்படி இருக்கும்போது எந்தவித முறையான திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் செட் அமைப்பது போல் மாநாட்டை நடத்திவிடலாம் என விஜய் நினைத்துவிட்டதுப்போல தெரிகிறது.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மாநாட்டு  பணிகளில் தாமதம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் வருகின்ற 27-ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram