Minister CV Ganesan : தேம்பி அழுத அமைச்சர்! ஆறுதல் சொன்ன மக்கள்
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வெ.கணேசன் தனது தாயை நினைத்து அழுததால் அங்கிருந்த மக்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. அங்கு புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார். இதனால் கழுதூர், தொண்டங்குறிச்சி, அரியநாச்சி, சிறுவம்பூர், பில்லூர், பாசார் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள். தங்களுடைய கால்நடைகளுக்கு இந்த மருத்துவமனை பெரிதும் பயன்படும் என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
மேலும் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். 15 நாட்களில் உடனடியாக பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்தார் அமைச்சர். தன்னுடைய சொந்த ஊரில் 6 கோடிக்கு மேல் பொதுமக்களுக்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் தன்னுடைய தாய் இந்த தெருவில் அருகே தான் உட்கார்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்... என்று சொல்லி தாயை நினைத்து கண் கலங்கினார். மேலும் மக்கள் தன் மீது பாசமாக இருப்பதாகவும் உருக்கமாக பேசினார். அமைச்சர் அழுததை பார்த்த மக்கள் நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் என்று ஆறுதல் சொன்ன நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.