North Korea Kim Jong Un : கடமை தவறிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்த அதிபர்! வடகொரியாவில் பரபரப்பு

Continues below advertisement

உயிரிழந்ததால் கடுப்பான வடகொரிய அதிபர் கிம் ஜாங் பல அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பதால ஓட்டு மொத்த வடகொரியாவே ஆடி போய் உள்ளது. 

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக 1000 மேற்ப்பட்டோர் உயிரிழிந்ததாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தொடர் மழையால் வடகொரியாவிம் மேற்கு  நகரமான சினுய்ஜூ மற்றும் அண்டை நகரமான உய்ஜூவில் 4100 வீடுகள் மற்றும் 7410 ஏக்கர் உள்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

இதனிடையே கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வடகொரிய அதிபர் கின் ஜாங் உன் பார்வையிட்டு மக்கள் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகளுக்கு மரண  தண்டனை வழங்கப்படும் என்று கின் ஜாங் கூறியதாக தகவல் வெளியானது 

மேலும்  வெள்ள பாதிப்பை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு கடந்த மாத இறுதியில் கின் ஜாங் உன் மரண தண்டனை விதித்ததாக தென் கொரிய செய்தி ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகள் மேல் ஊழல் மற்றும் வேளையில் கடமை த்வறியதாக குற்றச்சாட்டப்பட்டு அந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வட கொரியாவில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமான அதிகாரிகள் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக வட கொரிய சார்பில் இருந்து எந்த வித அதிகாராபூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram