Mayawati in Armstrong Funeral | சட்டம் ஒழுங்கு சரியில்லைஸ்டாலினை தாக்கிய மாயாவதி பரபரப்பில் தமிழகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூரில் அரசுப் பள்ளி அருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் மகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அங்கு பேசிய மாயாவதி, “மிகுந்த அர்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். புத்தர் காட்டிய மனிதாபிமான் வழியில் பயணித்தவர். அவரது மரணம் என்பது தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளுக்கு ஒரு பேரிழப்பு. அவரது இறப்பை கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன். தமிழிநாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கு. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பராமரிக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் அளிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் சோகத்தில் உள்ளது. கட்சி தொண்டர்கள் அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை அரசு முன்னிலையில் வைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற பணிகளை தொண்டர்கள் தொடர வேண்டும். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கட்சி அவர்களுக்கு எப்போதும் துணைநிற்கும் ” என பேசினார்.