Mamata Slams Modi | ”பேசும்போதே OFF ஆன மைக்” கோபமாக வெளியேறிய மம்தா! திகைத்துப்போன மோடி!

Continues below advertisement

கொஞ்ச நேரம் கூட நான் பேச கூடாதுன்னா.. என்ன எதுக்காக கூப்பிட்டிங்க என்று பிரதமர் மோடியின் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ள விவகாரம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது,

மத்திய அரசு கடந்த 23ம் 2024- 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்தது. இந்த சூழலில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி 3.0 வின் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது என்பதால் பல மாநிலத்தின் முதல்வர்கள் இதில் பங்கேற்பாற்கள் என்று எதிர்பார்க்கபட்டது..

நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி, ஜி.எஸ்.டி. வரி பகிர்வு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான நிதி, புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் என்று குற்றச்சாட்டை முன்வைத்து INDIA கூட்டணியை சேர்ந்த பல முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, கர்நாடகா முதல்வர்  சித்தராமையா,  தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் புறகணித்தனர்.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார். அப்போதே மோடி பக்கம் சாய்கிறாரே மம்தா என்று புருவங்கள் உயர்த்தப்பட்டன. அது குறித்து விளக்கமளித்த மம்தா "நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பேன்" என கூறிவிட்டு சென்றார். 

இந்நிலையில், தான் பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து 'மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  வெளிநடப்பு செய்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் நடத்த கூடாது என்று கூறினேன். நான் பேச விரும்பினேன், ஆனால் என்னுடைய மைக் அனைக்கபட்டுவிட்டது. என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கு பேச 20 நிமிடம் கொடுக்கபட்டது, அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10-12 நிமிடம் பேசினார்கள். எதிர்கட்சிகள் புறகணித்த நிலையிலும் நான் பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இதை அவமானமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
<இங்க மம்தா பைட் இருக்கு அதை வைக்க வேண்டும்>

இந்திலையில் நாடாளுமன்றத்தை நாள் தோரும் INDIA கூட்டணி கலங்கடித்து வந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி கலங்கடித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram