Mamata Banerjee | கவிழும் மம்தா ஆட்சி? ரவுண்டு கட்டிய மருத்துவர்கள்..தலைகீழான மேற்கு வங்கம்

Continues below advertisement

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை கையாள்வதில் மேற்கு வங்க அரசு தோல்வி அடைந்துவிட்டது என கண்டனங்கள் வலுக்கும் நிலையில் இதானால் மம்தா ஆட்சி கவிழும் அபயம் உள்ளதா என கேள்வி வளுத்துள்ளாது.

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் செமினார் ஹாலில் வைத்து மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழ்ந்துள்ளார். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதனை மூடி மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறி நியாயம் கேட்டு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் மருத்துவர் கொலை விவகாரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுவதாக போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர். தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என மம்தா பானர்ஜி அதிரடி காட்டினார். இருந்தாலும் அவருக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதால் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சிப்பதால் பரபரப்பான வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதனை மூடி மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறி உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவே அங்கு அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்து உள்ளது.

அவரின் பெண் உறுப்பின் 150 mg விந்தணு இருந்துள்ளது. இதன் அர்த்தம் இந்த சம்பவத்தை தனி ஆள் செய்திருக்க முடியாது. அங்கே உள்ளே மாணவர்கள் சந்தேகிப்பது.. ஒரு ஆள் செய்யவில்லை, அப்போது ஷிப்டில் இருந்த சிலரும் இதை செய்துள்ளனர். அந்த பெண் உணவிற்கு பின் அதீதமாக தூக்கம் வந்ததாக கூறியுள்ளார். அவரின் உணவில் இவர்கள் எதையாவது கலந்து இருக்கலாம்.. திட்டமிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் என்று நம்மிடம் கூறி உள்ளனர். அந்த பெண்ணின் கண்ணாடி உடைந்து இரண்டு கண்களில் குத்தி காதுகளில் அடிக்கப்பட்ட நிலையில் அங்கேயும் ரத்தம் உள்ளது. உதடுகள் கிழிந்து ரத்தம் வந்துள்ளது. அந்த பெண்ணின்.. இரண்டு கால்களும் உடைந்து உள்ளன. இதெல்லாம் நடக்கும் போது அந்த பெண் கத்த கூடாது என்பதால் அந்த பெண்ணின் தொண்டையை உடைத்து உள்ளனர். தலையின் பின்புறம் தாக்கப்பட்ட போது அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள். இவர் கைதான் நிலையில்.. குழு வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்கள் யார் யார்.. அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி வலுத்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram