Ma Subramanian joggig | UAE அமைச்சருடன் ஜாகிங்சென்ற அமைச்சர் மா.சு ’’டீ நல்லா இருக்கா?’’

சென்னையில், ஐக்கிய அமீரக பொருளதார அமைச்சருடன்,  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஜாகிங் சென்று அவருடன் தேனீர் அருந்தும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ஐக்கிய அமீரக பொருளதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் அல் மாரி, சென்னையில் நடைப்பெறுகின்ற இன்வெஸ்டொபியா குலோபல் டாக்ஸ் என்ற பொருளதார மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளார். 

இந்த நிலையில் இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஜாகிங் செய்தனர். பின்னர் இருவரும் ஒரு தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்தினர். அப்போது பேசிய அல்மாரி அமைச்சர் மா,சுப்பிரமணியனுடன் ஜாக்கிங் சென்றது மகிழ்ச்சியை தருகிறது. மேலும் இந்திய மற்றும் ஐக்கிய அமீரகம் உறவு என்பது மிகப்பெரிய பொருளதார உறவு.. மேலும் உலகளவில் வலுவான பொருளதார மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று அவர் பேசினார்.


அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அல் மாரி ஜாக்கிங் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அல் மாரி தன்னுடன் வந்த பிரதிகளுடன் முதல்வர் ஸ்டாலினை  சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola