Kumaraguru : ”காப்பாத்துங்க எடப்பாடி ஐயா..அதிமுக EX MLA கொலை மிரட்டல்”கதறி அழும் அதிமுக நிர்வாகி

உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் எம்.எல் ஏ குமரகுரு அடித்துவிட்டதாக அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள் எடப்பாடி ஐய்யா என கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களை பரபரப்பாகி வருகிறது.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளரும்,  முன்னாள்  அரசு வழக்கறிஞருமான கிருஷ்ணன் இன்று விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து பேசுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.

அதில் நேற்று உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை என்பவர்  கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு உடனடியாக அழைப்பதாக தெரிவித்ததாகவும்,  அப்போது கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வீட்டுக்கு சென்ற போது  பத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் இருந்த போது தன்னை குமரகுரு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மனைவி கண் முன்னே கழுத்தை பிடித்து தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் ஆகியோரே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆபத்திலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் காப்பாற்ற வேண்டும் என்றும், தனது குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் தமிழ்நாட்டில் உள்ள எந்த அதிமுக தொண்டருக்கும் தன்னைப் போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்ட கூடாது என கண்ணீர் விட்டு அழுத அதிமுக நிர்வாகியின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola