Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!
தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்ததையடுத்து தமிழக போலீசார் தெலங்கானாவில் முகாமிட்டு தங்கி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார்.