Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்

10 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரியை நேற்று ஹைதராபாதில் வைத்து காவல்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது கஸ்தூரி சென்னை காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். 

தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் காவல்துறையினர் தேடி வந்ததை அடுத்து கஸ்தூரி தலைமறைவாகி முன் ஜாமின் கோரினார். ஆனால் கஸ்தூரியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 

இதனையடுத்து தலைமறைவாகி உள்ள நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ஹைதராபாத் பறந்த காவல்துறை நேற்று அங்கு கஸ்தூரியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி தற்போது சென்னை அழைத்துவரப்பட்டார். சிந்தாத்ரிபேட் காவல்நிலையத்திற்கு நடிகை கஸ்தூரியை போலீசார் அழைத்து வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. காரை விட்டு நடிகை கஸ்தூரி சிரித்த முகத்துடன் இறங்கி செல்லும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola