Kanimozhi on BJP : ”பாஜக ஆட்சி நிலைக்காது! நல்ல விஷயம் சொன்ன சு.சுவாமி” கனிமொழி சூசகம்
நீட் தேர்வு என்பது ஒன்று ரத்து செய்யப்பட வேண்டும் என்பது-தான் திமுக அரசின் கொள்கையாக உள்ளது- கனிமொழி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற பின்னர் முதன் முறையாக தூத்துக்குடி வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அரங்கில் புணர் அமைக்கப்பட்ட குறைத்தீர்கும் நாள் கூட்ட அரங்கினை திறந்து வைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு 2கோடியே 67லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு என்பது ஒன்று ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் திமுக அரசின் கொள்கை என்ற அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி சம்பந்தமாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழி வகைவகை செய்யப்படும் தூத்துக்குடியில் நடைபெற்ற நீ தேர்வு குளறுபடிகள் குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.தொடர்ந்து தமிழகம் பல்வேறு விசயங்களில் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பாக
மழை வெள்ள நிவாரண தொகை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தமிழகத்தை தவிற மற்ற எல்லாம மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிவாரண உதவிகளை வழங்குகிறது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து
தனிப் பெரும்பான்மை பெறாமல் பாஜக ஆட்சி அமைத்திருப்பது என்பது ஒராண்டு கூட நிலைக்காது என்று சுப்பிரமணியசுவாமி கூறி இருப்பது என்பது.
முதன்முறையாக அவர் நல்ல விசயத்தை கூறி உள்ளார் அது அவருடைய ஆசை நான் ஒன்றும் சொல்ல்வதற்கு இல்லை என்றார்.