Kanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஹெல்மெட் போடாமல் இனிமேல் வராதீங்க என்று ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய திமுக எம்.பி கனிமொழியின் செயல் பாராட்டை பெற்று வருகிறது. 

தூத்துக்குடி  நாடாளுமன்ற உறுப்பினர்.கனிமொழி கருணாநிதி எம்பி, நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில்  தனது வெற்றிக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்  ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர். 

இதைப்பார்த்த எம்.பி கனிமொழி தான் வந்த வாகனத்தை விட்டு இறங்கி வந்தார். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்களை பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும்‌ அன்பு கோரிக்கை வைத்து, அந்த இளைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

எம்.பி கனிமொழி ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களிடம் அறிவுரை கூறி அனுப்பும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola