Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?
புதிய காஷ்மீர் எனும் முழக்கத்தை முன்னிறுத்தி தேர்தலை ஜம்மு அண்ட் காஷ்மீரில் எதிர்கொண்ட பாஜகவின் கனவு தகர்த்துள்ளது.. முதல்முறையாக காஷ்மீரில் எப்படியாவது பாஜக முதலமைச்சரை அமர வைத்துவிட வேண்டும் பாஜக முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளது.. காஷ்மீரின் பாஜக தோல்வி சந்தித்ததற்கான ஐந்து முக்கியமான காரணங்கள் என்ன விரிவாக பார்க்கலாம்..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் மூன்று மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில், 49 இல் காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணி 29 தொகுதிகளிலும், சுழற்சி மற்றும் இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கின்றனர்.
பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளதால், அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாடு கட்சியின் ஓமர் அப்துல்லா மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் காஷ்மீரில் போட்டியிடுவதை தவிர்த்த பாஜக, சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜம்மு காஷ்மீரை கைப்பற்றி விட வேண்டும் என்று காய்களை நகர்த்தியது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாம் மூலம் புதிய காஷ்மீர் உருவாக்கப்பட இருக்கிறது, இங்கே அமைதியும் வளர்ச்சியும் மேலோங்கி நிற்கும் என்று பாஜக பிரச்சாரம் செய்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவின் பிரச்சாரம் அங்கே எடுபடவில்லை என்பதையே காட்டும் விதமாக அமைந்துள்ளது. பாஜகவின் முயற்சி வாக்குகளாக மாறாமல் போனதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகிறது..
அதில் முக்கியமானது ஆர்டிகல் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்ட போது அங்கே பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொலைத் தொடர்புகள் முடக்கப்பட்டது. நிலமை சீராக தொடங்கியதும், புதிய காஷ்மீர் என்ற முழக்கத்தை பாஜக முன் வைக்கத் தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகளோ காஷ்மீரின் கண்ணியம் பறிபோய் விட்டதாக மக்கள் முன் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். இது உணர்வுபூர்வமாக காஷ்மீர் மக்கள் மத்தியில் தாங்கள் முக்கியமான ஒன்றை பறிகொடுத்து விட்டோம் என்ற எண்ணத்தை உருவாக்கியது. மக்களிடம் தங்கள் இழந்து விட்டதாக உருவான எண்ணத்தை பாஜகவால் மறக்கடிக்க முடியவில்லை. பாஜகவை ஆன்ட்டி காஷ்மீரிகள், காஷ்மீர் மக்களுக்கு எதிரானவர்கள் என்று ப்ரொஜெக்ட் செய்தார்கள் எதிர்க்கட்சியினர், அது பெருமளவில் பலன் அளித்துள்ளது.
அதே நேரம் புதிய காஷ்மீர் என்ற பாஜக, காஷ்மீரில் அமைதியை மீட்டெடுத்து, வளர்ச்சியை உருவாக்குவோம் என்றனர். ஓரளவு காஷ்மீரில் அமைதி திரும்பி இருப்பது உண்மைதான் என்றாலும், சுற்றுலா சார்ந்த வளர்ச்சி, புதிய சிறப்பு திட்டங்கள், புதிய கட்டுமானங்களை குறிப்பிட தகுந்த அளவு பாஜகவால் உருவாக்க முடியவில்லை. குறிப்பாக வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் கோட்டை விட்டது பாஜக. இதனால் மக்களை கவரும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டது.
அடுத்ததாக காஷ்மீரில் பிரிவினைவாத அணுகுமுறையை மக்கள் மத்தியில் பலமாக பாஜக முன் வைத்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான பாஜகவின் முயற்சிகள் மக்கள் மத்தியில் எடுபட்டாலும், ஒரு விதமான பயத்தை விதைத்து, அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்த பாஜகவால், தங்களின் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பரி போய் விட்டதாக காஷ்மீர் மக்கள் உணர்வதை தடுத்து நிறுத்த முடியவில்லை.
மோடி அலை 2014இல் இந்தியா முழுவதும் வீசியபோதும், காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. அப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் பாஜகவுக்கு தனித்துவமான முகம் இல்லை, அதே நேரம் ஃபாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை பலமாக வேரூன்றி உள்ளன. அதை எதிர்க்க மக்கள் மாநாடு கட்சி, உங்கள் கட்சி போன்ற கட்சிகளை மலர் பிறக்க நினைத்த பாஜகவை முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில்தான் ஜம்முவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் பாஜகவால் இம்முறையும் காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய் உள்ளது.