Thalavai Sundaram Removed From ADMK: தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

Continues below advertisement

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியும் இரட்டை இலை சின்னத்தை பெற முக்கிய தூணாக செயல்பட்ட சுந்தரம் மீது இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

20 ஆண்டுகளாய் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் மூத்த நிர்வாகி தளவாய் சுந்தரம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் டெல்லியின் தமிழக பிரதிநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்.. மேலும் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவும் பெற பெரும்பாடு பட்டவர். தற்போது கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சியிலும் அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் என பொறுப்புகளை தன்வசம் வைத்திருந்தார். இப்படி கட்சியின் ஒரு தூணாக உள்ள தளவாய் சுந்தரத்தின் பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிச்சாமி திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தளவாய் சுந்தரம் மீதான நடவடிக்கைக்கு காரனம் அவர் ஆர் எஸ் எஸ் உடன் நெருக்கமாய் இருந்து வந்தது தான் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது எடப்பாடியாரின் கோபத்தை மேலும்
அதிகரிக்க செய்துவிட்டதாம். 

இதனையடுத்து உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார் எட்ப்பாடி பழனிச்சாமி. அதில் கட்சியின் கோட்பாடுகள், சட்டத்திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக தான் தளவாய் சுந்தரத்தை தேடி வந்து நெருக்கம் காட்டுவதாகவும் இவர் மீது தவறில்லை எனவும் உள்ளூர் அதிமுகவினர் பேசி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram