MLA vs People | ‘’ஊருக்குள்ள வராதீங்க!’’சுத்துப்போட்ட மக்கள் திணறிய MLA

Continues below advertisement

அதிகாரிகள் வராமல் வழிவிட முடியாது, அவங்க வரும் வரை இங்கு இருப்போம் என்று கல்குவாரி விவகாரத்தில் ஆய்வுக்கு சென்ற வட்டாட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதம் செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது 


   தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மடதஹள்ளி ஊராட்சியில் 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மடதஹள்ளி, பசுவாபுரம் சாலையில் சிவனஹள்ளி பகுதியில் உள்ள நரசிம்ம பெருமாள் மலை உள்ளது. இந்த மலையில் தனியார் கல்குவாரி ஒன்று கடந்த, 2012 முதல் இயங்கி வருகிறது. அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஏலம் விடப்பட்டு சாந்தமூர்த்தி  என்பவரின் பெயரில் எடுக்கப்பட்ட இந்த குவாரியை , அதிமுகவை சேர்ந்த ரத்னவேல் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கல்குவாரிக்கு அருகில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்கள், கல்குவாரியால் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 
 கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்குவாரியில் இரவு பகலாக தொடர்ந்து வெடி சத்தத்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் லாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு செல்வதாகவும் அரசின் விதிமுறைகளை மீறியும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும்,   இந்த கல்குவாரியை எடுத்து நடத்தி வரும் அதிமுகவை சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்கு ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் என அனைவரும் உறுதுணையாக இருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர் 

இந்த நிலையில்    கடந்த 2 ம் தேதி கல்குவாரியின் டெண்டர் காலம் முடிந்துவிட்டது. இருந்தபோதிலும் இரவு நேரத்தில் அரசு அனுமதி என்று கூறிக்கொண்டு கல்குவாரி இயங்கி வருகிறது என்றும் இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளமால் இருப்பதாகவும்  பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரி புகார் அளித்தனர். இதனையறிந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி  கல்குவாரி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார்.  அதனை தொடர்ந்து அங்கு வந்த கல்குவாரியை நடத்தும் ரத்னவேலுவின் காரை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டதால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது. 

தகவலறிந்து அங்கு  வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் கடத்தூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர் . கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் அவ்வாறு மூடவில்லை எனில் குடும்ப அட்டை, ஆதார அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்து செல்வோம் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பொதுமக்களை சமாதானம் செய்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாசியர் இந்த குவாரி விவாகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram