Kovai to Abu Dhabi Flight | ‘’நானும் கோவை தானுங்க’’கலகலப்பாய் பேசிய விமானி..கோவை TO அபுதாபி FLIGHT
கோவையில் இருந்து அபுதாபிக்கு நேற்று முதல் விமான சேவை துவங்கிய நிலையில், விமானம் புறப்படும் முன்பு கேப்டன் விவேக் கந்தசாமி நானும் கோயம்புத்தூர் காரன் தாங்க என பயணிகளிடையே கலகலப்பாக பேசிய வீடியோ காட்சி சமூக வளை தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமான போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் கோவை - அபிதாபி இடையே நேற்று முதல் விமான சேவை துவங்கியுள்ளது.
அபுதாபியில் இருந்து கோவைக்கு நேற்று காலை 163 பயணிகளுடன் இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.
இதனைதொடர்ந்து நேற்று காலை 7. 40 மணியளவில் இண்டிகோ விமானம் தனது கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது. அதில் நானும் துணை விமானியும் கோயமுத்தூரை சார்ந்தவர்கள் தான், கோவையில் இருந்து அபுதாபிக்கு முதன் முதலாக செல்லும் விமானத்தை இயக்குவது பெருமையாக உள்ளது. கோவையில் இருந்து விரைவில் சிங்கப்பூர், கொழும்புக்கு விமான சேவை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவையானது வழங்கப்பட இருப்பது குறிப்பிடதக்கது. இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.