ABP - C Voter Exit Poll | சொல்லி அடித்த அண்ணாமலை? EXIT POLL சொல்வது என்ன? தமிழக நிலவரம்!

Continues below advertisement

செய்தி நிறுவனங்கள் ஒவ்வென்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்ட நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கடந்த முறைப்போல் இல்லாமல் இந்த முறை நிச்சயம் வெல்லும் என முடிவுகள் தெரிவிக்கின்றன..

இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலானது, முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதியே நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.

ஏபிபி - சி வோட்டர் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய  கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளது என ABP-Cvoter கணித்துள்ளது.

இந்திய டுடே எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 26-30 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 1-3 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 6-8  தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என இந்திய டுடே கணித்துள்ளது.

சிஎன் என் நியூஸ் 18 எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 36-39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 1-3 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் 2 தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என 
சிஎன் என் நியூஸ் 18 கணித்துள்ளது.

டி வி 9 எடுத்த தேர்தலுக்கு பிந்தைய  கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 35 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என டி வி 9 கணித்துள்ளது.

Republic மற்றும் matrize தேர்தலுக்கு பிந்தைய எடுத்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 35-38 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 1 தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என Republic மற்றும் matrize கணித்துள்ளது.

TIMES Now எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 34 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 2 தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என TIMES Now கணித்துள்ளது.

இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வைத்து பார்க்கும் போது அண்ணாமலை சொன்னது போல தமிழ்நாட்டில் இரட்டை இலக்கில் வாக்கு பெரும்ம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வயிபிருப்பதாக தெரியவந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram