Lok sabha election | 400 இடங்களை வெல்லுமா பாஜக? ஆட்சியமைக்கப் போவது யார்? ABP - C VOTER EXIT POLL

Continues below advertisement

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க போவது யார்? எந்த கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் என ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

பிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 153 முதல் 183 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி மட்டும் 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்றும், பாஜக தலைமையிலான கூட்டணி 41.5 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என பாஜகவினர் சூளுரைத்து வந்த நிலையில்,  339 முதல் 396 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram