
EPS vs Amit shah | ”சிறைக்கு செல்ல தயார்” எடப்பாடி பழனிசாமி அதிரடி! ஷாக்கான அமித்ஷா! | BJP | ADMK
அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை எக்காரணத்தை கொண்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதாமாக இருக்கிறாராம் இபிஎஸ். இதனால் பாஜக தனக்கு எந்த சிக்கலை கொடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்று தனக்கு நெருங்கியவரகளிடம் இபிஎஸ் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதை அறிவிப்பதும், அதிமுக - பாஜக கூட்டணியை அறிவிப்பதும் தான்.
2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்று விரும்பும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தான் அது சாத்தியம் என்று நம்புவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது டெல்லி பாஜகவின் விருப்பமாக இருக்கிறது. இதனாலேயே பாஜக கூட்டணிக்கி செல்வதில் இபிஎஸ் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் நடந்த சந்திப்பின் போது கூட அமித்ஷா இபிஎஸ்-யிடம் இதே கண்டிசனை போட்டதாக சொல்லப்படுகிறது.
இபிஎஸ்-ஐ எப்படியாவது தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய அமித்ஷா செங்கோட்டையனை வைத்து காய் நகர்த்தியுள்ளார். அவரிடமும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் உங்களுக்கு அதிமுவை தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அமித்ஷா சொன்னதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து செங்கேட்டையன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர்.
இது இபிஎஸ்-ன் காதுகளுக்கு செல்ல ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை எக்காரணத்தை கொண்டும் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டேன். ஓபிஎஸ் எப்போது எம்ஜிஆர் மாளிகையில் தாக்குதல் நடத்தினாரோ அப்போதே அவர் அதிமுக தொண்டன் என்ற பெருமையை இழந்து விட்டார் என்று இபிஎஸ் கடுகடுத்து போனதாக சொல்கின்றனர். இனிமேல் இந்த மூவரையும் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு என்னிடம் வந்து சொல்லுவதாக இருந்தால்.. என்னை யாரும் சந்திக்க வேண்டாம். இது தான் கடைசி..இதனால் பாஜக தனக்கு எந்த சிக்கலை கொடுத்தாலும் அதை ஏற்க தயார் . யார் வந்து சொன்னாலும் நான் அவர்களை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக இபிஎஸ் இருப்பதாக சொல்கின்றனர். இபிஎஸ்-இப்படி பிடிவாதமாக இருப்பது அமித்ஷாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவரை எப்படித்தான் சமாதானபடுத்துவது என்று தெரியமல் அமித்ஷா குழப்பிப்போய் இருப்பதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.