EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026

அதிமுகவினரை வைத்தே இபிஎஸ்- ஐ வழிக்கு கொண்டு வரும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. சில காரணங்களை மனதில் வைத்து மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என ஐபிஎஸ் - ம் இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர். 

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஐபிஎஸ் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமையுமா என கேட்டதற்கு திமுக தான் எங்களுடைய ஒரே எதிரி, வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பது தான் நோக்கம் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அப்படியென்றால் பாஜக கூட்டணிக்கு அதிமுக தயாராகி விட்டதா என்ற கேள்வி வந்துள்ளது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட வேண்டும் என்பதில் பாஜக தலைமை விடாப்பிடியாக இருக்கிறது. இதற்காக இபிஎஸ் இடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அண்ணாமலையும் அதிமுகவை அட்டாக் செய்வதை குறைத்துக் கொண்டார். ஆனால் இபிஎஸ் கூட்டணி பேச்சு வார்த்தையில் பிடி கொடுக்காமல் இருந்ததால் ரெய்டு ஆயுதத்தை வைத்து பாஜக மிரட்டி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவினரை வைத்தே இபிஎஸ் உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எஸ் பி வேலுமணி இல்ல திருமண விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்ததும் செங்கோட்டையன் தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மொத்தமாக எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு மரியாதை செய்ததன் பின்னணிகளும் இந்த காரணமே இருப்பதாக சொல்லப்படுகிறது. 

கட்சிக்குள் இருந்தே அழுத்தம் வர ஆரம்பித்து விட்டதால் இபிஎஸ்ஸும் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் விவகாரத்தில் அதிமுகவினர் அதற்கு இருப்பதால்  கூட்டணியிலும் முரண்டு பிடித்தால் அது கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்பதால் ஈபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கின்றனர். மற்றொரு பக்கம் தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக இபிஎஸ் நகர்த்திய காய்கள் பலன் அளிக்காததால் மீண்டும் பாஜக பக்கமே திரும்பியுள்ளார். 

தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கட்சியினரை மீண்டும் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே இபிஎஸ் இன் இலக்காக இருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola