Duraimurugan Singapore Trip : ”நீ பார்த்துக்கோ உதய்”சிங்கப்பூர் பறந்த துரைமுருகன்! காரணம் என்ன?

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் திடீரென சிங்கப்பூர் சென்றுள்ளது அறிவாலயத்தில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

பதினாறு நாள் சுற்றுப்பயணமாக முதலீடுகள் இருப்பதற்காக தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவ்வப்போது தமிழ்நாட்டின் அரசு பணிகள் பற்றிய விவரங்களை தலைமைச் செயலாளர் உள்ளிட்டவரிடம் பேசி ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, கட்சியிலும் தமிழக அரசியலும் தற்போது இருககும் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திடீரென சிங்கப்பூர் சென்றுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இவர் எதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார், ஏதேனும் ஒரு அவசரமான நிலையில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியையும் இது பலர் மத்தியில் எழுப்பியுள்ளது. 

இந்நிலையில் துரைமுருகன் தரப்பிலிருந்து வரக்கூடிய தகவலின் அடிப்படையில் இது திடீரென திட்டமிட்ட பயணம் எல்லாம் இல்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்ட பயணம் தான் என்று சொல்லப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன் அவ்வப்போது அப்போலோ மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய உடல் நிலையை செக்கப் செய்து வருவது வழக்கம், இன் நிலையில் உயரிய மருத்துவ ஆலோசனைக்காக தற்போது அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமே அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் பல்வேறு நிகழ்வுகள் வரிசையாக இருந்ததால், தற்போது அந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. 

மேலும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவரை வீட்டு தனியாக சந்தித்த துரைமுருகன், ரஜினி பஞ்சாயத்துகளை பேசிய போது அப்படியே சிங்கப்பூர் சென்று மருத்துவ ஆலோசனை பெற உள்ளதையும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தற்போது துரைமுருகன் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், துணை முதல்வர் என்று அறிவிக்கப்படாத உதயநிதி ஸ்டாலினே துணை முதல்வர் போன்று வளம் வருகிறார். 

கட்சியின் முக்கிய முடிவுகள், தமிழக அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் என அதிகாரிகள் தொடங்கி கட்சி நிர்வாகிகள் வரை அனைத்தும் உதயநிதி ஸ்டாலினை சுற்றியே சுழன்று வருகிறது என்ற பேச்சுகள் ஏற்கனவே ஊலா வந்து கொண்டிருக்கும் நிலையில். அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அதான் உதயநிதி இருக்காரே அவரு பாத்துபாரு என்று சொல்லிவிட்டு, அமைச்சர் துரைமுருகன் சிங்கப்பூர் பறந்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola