Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையை ரத்து செய்கிறார முதல்வர் ஸ்டாலின்? களத்தில் இருந்து அமைச்சர்கள் சொல்வது என்ன என பரபரக்கும் தகவலை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்...
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக வேட்பாளரை அறிவித்தது திமுக. திமுக எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி காலமானதால் அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இடைத் தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் 8 ஆம் தேதியோடு பிரச்சாரம் முடிவடயவுள்ளது.
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் கட்சியான திமுக தரப்புல் அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணிகளை தீவிர படுத்தி வருகின்றனர்.அதேபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போட்டியிடுகிற பாமக, நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி திவிரமாக வேலை பாத்து வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தால் அதிமுகவின் ஓட்டி யாருக்கு என்பதில் கடுமையான போட்டு நிலவி வருகிறது.
முன்னதாக கள்ளச்சாரய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில் முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை என்ற விமர்சனம் தீயாய் பரவியது.இந்தநிலையில் விக்கிரவண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுக்குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் அமைச்சர்களிடமும் மாவட்ட செயலாளர் அவர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்போது விசாரித்து வருகிறார். அப்போது பொன்முடி ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர்கள் முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.
அண்ணே நீங்க உடம்ப பாத்துக்கோங்க முக்கியமான எதிர்க்கட்சியான அதிமுகவே களத்துல இல்ல பாமக நாம் தமிழர் போன்ற கட்சிகள் தான் போட்டியிடுறாங்க நீங்க வந்து பிரச்சாரம் செய்யணும் என்ற அவசியம் இல்லை. நாங்கள் இடைத்தேர்தலில் ஜெயித்து விட்டு உங்களை நேரில் வந்து சந்திக்கிறோம் உதயநிதியை மட்டும் அனுப்பி வைங்க என்று வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விக்கிரவண்டி தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் ஒரு இடம் விடாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் கசிந்திருக்கிறது. எனவே வந்திருக்கும் தகவலின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் முதலமைச்சர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் திட்டம் இதுவரை இல்லை என்பது தெளிவாகியுள்ளது