Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்

Continues below advertisement

சிறுபான்மை துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு கட்சி மற்றும் அரசு பதவிகளில் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

செஞ்சி மஸ்தானின் பெயர் நீண்ட நாட்களாகவே ரேடாரில் இருந்து வருகிறது, அவருக்கு எதிராக உள்ளூர் திமுகவிலேயே கோஸ்டி பூசல் நிலவி வந்த நிலையில், கட்சி ரீதியாக முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டது திமுக தலைமை. மேலும் அவரது அமைச்சர் பதவியும் பறிபோக வாய்ப்புகள் அதிகம் என அரசல்புரசலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அதன் பின்னணியில் மூத்த அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான  பொன்முடியின் செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்டுகிறது. 


விழுப்புரம் மாவட்டத்தை யார் கண்ட்ரோலில் எடுப்பது என்பதில் நீண்ட காலமாகவே அமைச்சர் இந்த நிலையில் தான் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக கள்ளச்சாராயம் புகார், விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் செலுத்தும் ஆதிக்கம், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் செய்வது, டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் ஆகிய புகார்களால் திமுக நிர்வாகிகளும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இதனால் முதலில் மகன் மற்றும் மருமகனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ரிப்போர்ட்கள் அனைத்துமே முதல்வர் ஸ்டாலினின் காதுகளுக்கு போக, அது இல்லாமல் பொன்முடியும் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக காய்களை நகர்த்த விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரார் பதவியை இழந்தார் அவர். அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ப. சேகர் என்பவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப. சேகர் பொன்முடியின் ஆதரவாளர் என்றெல்லாம் சொல்லபட்டது.
இப்படி இருக்கையில் மீண்டும் செஞ்சி மஸ்தானுக்கு கட்சி பதவியை வழங்க முடிவு செய்த திமுக, தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின், மாவட்ட அவைத்தலைவராக அவர் நியமிக்கபடுவதாக அறிவிப்பை வெளியிட்டது.  இந்த மாவட்ட அவை தலைவர் பதவி, ப. சேகர் வகித்து வந்ததே. இந்நிலையில் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த பதவியை ப. சேகருக்கும், சேகர் வகித்து வந்த பதவியை மஸ்தானுக்கும் வழங்கியுள்ளது திமுக.
இந்நிலையில் விழுப்புரம் அரசியலில் இருந்து செஞ்சி மஸ்தானை ஓரம் கட்டும் வகையில் டம்மி பதவி ஒன்றை பெயருக்கு திமுக வழங்கியுள்ளதாக கருத்துக்கள் எழுந்தது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் 'காஜா நசீர்' செஞ்சி நகர திமுக செயலாளராகவும், மஸ்தானின் மகன் மொக்தியார் அலி செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகவும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் பொறுப்புகளை வகித்து கொண்டு கட்சியினரை அனுசரித்து செல்லாமல் திமுகவில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த  நிலையில் அவர்களை பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram