DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!

Continues below advertisement

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் டி கே சிவக்குமாருக்கும் இடையே கடுமையான புகைச்சல் நிலவு வரும் நிலையில், கர்நாடகாவுக்கு மூன்று துணை முதல்வர்கள் தேவை என்று சித்தராமையாவும் ஆதரவாளர்கள் கொளுத்தி போட்டு வருகின்றனர்.. இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து யாரேனும் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் டி.கே சிவகுமார்..

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவக்குமார் மத்தியில் இருக்கும் அதிகார சண்டை மற்றும் புதியது அல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதே முதல்வர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று டி கே சிவக்குமார் விடாப்பிடியாக போட்டி போட்டார், ஆனால் காங்கிரஸ் தலைமை இதில் தலையிட்டு டி கே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி சித்த ராமையாவை முதல்வர் அரியணையில் அமர வைத்தது.

இந்நிலையில் அவ்வப்போது இருவர் ஆதரவாளர்கள் மத்தியிலும் புகைச்சல்கள் கிளம்பிக் கொண்டே வந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின், புகைச்சல் அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாஜக கூட்டணி 19 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆள் வெறும் ஒன்பது தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்நிலையில் தென்னிந்தியாவும் அதுவும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில், எதிர்பார்த்த அளவு காங்கிரஸ் ஆள் வெற்றிபெற முடியாததை டி கே சிவக்குமார் பக்கம் சித்ராமய்யாவின் ஆதரவாளர்கள் திருப்பி வருகின்றனர்.

இந்நிலையில்தான் இந்த சூழலை பயன்படுத்த நினைக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கர்நாடகாவிற்கு மூன்று துணை முதல்வர் பதவிகள் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்த தொடங்கியுள்ளனர். 

இதன் மூலம் டிகே சிவகுமாரின் அதிகாரம் குறைக்கப்படும், அதே நேரம் கர்நாடகாவில் தனக்கு போட்டியாக யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறார் சித்தராமையா.

ஆனால் அதே நேரம் விரைவில்  கர்நாடகாவின் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சூழ்நிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் டி.கே சிவகுமார். குறிப்பாக ஒக்கலிகா சமுதாயத்தில் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் டி கே சிவகுமார், எச் டி குமாரசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒக்கலிக்கா சமுதாய மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பயன்படுத்த நினைக்கிறார். 

இருதரப்பு இடையேவும் கோஷ்டி பூசல் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி அமைப்பதற்கு முன்பு, மூன்று துணை முதல்வர்கள் பதவி தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அதை டி கே சிவக்குமார் தடுத்து விட்டு துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

அதனால் அந்த துணை முதல்வர் பதவியை டார்கெட் செய்யும் பிற அமைச்சர்களை தூண்டிவிட்டு வருகிறார் சித்தராமையா.

துணை முதல்வருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் இல்லாத நிலையில், இந்த துணை முதல்வர் பதவி என்பது ஒரு பெருமைக்கான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் லிங்காயத், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோர் பிரதிநிதித்துவம் இல்லை என்ற கொந்தளிப்பு கட்சிக்குள் நிலவுகிறது.

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நிலைமை கையை மீறி போவதை உணர்ந்துள்ள டி.கே சிவகுமார் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுவெளியில் முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி குறித்து யாரேனும் பேசினால் அவர்கள் மீது இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை பாயும். இதுகுறித்து சித்தராம் ஐயா மல்லிகார்ஜுன கார்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினேன், இனி அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் யாரும் இது குறித்து பேச கூடாது. மிகவும் கடினப்பட்டு கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளோம், கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் புகைச்சலுக்கு டி கே சிவக்குமார் ஃபுல் ஸ்டாப் வைத்துள்ள நிலையில், இடைத்தேர்தல் முடிவுகளை குறித்து இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram