Dindigul | “எதுக்கு வீடியோ எடுக்குற”பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! அடாவடியில் ஈடுபட்ட அதிமுகவினர்
திண்டுக்கல்லில் செய்தி சேகரிக்க சென்ற ஒளிப்பதிவாளரின் செல்போனை பிடிங்கி அதிமுக தொண்டர் தகராறு செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் 2 நாள் சுற்று பயணமாக திண்டுக்கல் வருகை தந்துள்ளார். முதல் நாளான இன்று அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வர்த்த சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் அதே ஹோட்டலில் கட்சிக்காரர்கள் நிர்வாகிகள் ஆகியோருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது உணவு தீர்ந்து கட்சிக்காரர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் கிளம்பி சென்றதை அங்கிருந்த ஒளிப்பதிவாளர் நாகராஜன் உட்பட பல ஒளிப்பதிவாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் வீடியோ போட்டோ எடுத்து ஒளிப்பதிவாளர் நாகராஜன் செல்போனை பிடிங்கி தகராறு செய்தனர். தகவல் அறிந்து அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சார்ந்த அனைத்து பத்திரிகையாளர் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் மெங்கில்ஸ் ரோட்டில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிமுகவினர் பத்திரிகையாளர்களை சமாதானம் செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.