Temple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”

உத்தர பிரதேசத்தில்  கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை உத்தர பிரதேசத்தில்  கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் கோவிலில் இருந்த ஏசியிலிருந்து தண்ணீர்  கசிந்துள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் சாமியின் பாதத்திலிருந்து வரும் தீர்த்த நீர் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தியுடன் குடித்தனர்.  மேலும் சில பக்தர்கள் பிளாஸ்டிக் கப்பை கொண்டு வந்து  தண்ணீரை எடுத்துச் சென்றனர். 

அப்போது அந்த இடத்தில் vlog செய்து கொண்டிருந்த யூ டியுபர் ஒருவர் இதைப்பார்த்து ஷாக்காகி, அங்கிருந்தவர்களிடம் இது தீர்த்தம் இல்லை, ஏசியில் இருந்து வழியும் தண்ணீர் என்று கூறியுள்ளார். இதனை கண்டுக்கொள்ளாத மக்கள் அந்த தண்ணீரை குடித்துக்கொண்டும் தலையில் தெளித்துக்கொண்டும் சென்றனர். தற்போது இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola