Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறை

Continues below advertisement

சிதம்பரம் நடராஜர் கோவில் கொடிமரத்தை மாற்றும் விவகாரத்தில் தீட்சிதர்கள் மற்றும் இந்து சமய அறநலத்துறை அதிகாரிகள் இடையே  வாக்குவாதம் ஏற்ப்பட்ட நிலையில் கோவில்  புனரமைப்பு பணிகளுக்கு 15 நாட்கள் தடைவிதித்து சிதம்பரம் சார்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

சிதம்பரம் நடராஜப் பெருமாள் கோவிலில் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித உற்சவம் நடைபெறாமல் இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கோவில் கொடி மரம் மழை மற்றும் வெயிலின் காரணமாக சேதமடைந்து வருவதால் புதிய கொடி மரம் வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் கொடிமரத்தை மாற்றும் பணியை  இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அதிகாரிகள் நேற்று துவங்கினர். அப்போது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வழக்கு விசாரணை முடியும் வரை கொடி மரத்தை மாற்ற கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை கொடி மரத்தை மாற்றுவதற்காக கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கோவிலுக்கு வந்தனர்.அதே நேரம் தீட்சிதர்களும் அப்பகுதியில் மொத்தமாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் கோவில் கொடிமரத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் பழைய கொடிமரம்  போல் புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என தீட்சிதர்கள் விடாப்பிடியாக இருந்ததால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில் சிதம்பரம்  கோவிலில் எந்த புணரமைப்பு பணிகளையும் செய்ய 15 நாட்களுக்கு செய்யக்கூடாது என்று தடைவிதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற சார்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.நீதிபதியின் தடை உத்தரவு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழுவினர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கோவிலில் இருந்து வெளியேறினர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram