Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திரா

Continues below advertisement

‘’ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை..எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை..நான் மட்டும் உள்துறை அமைச்சர் ஆனால்…’’என ஆளும் கூட்டணியில் உள்ள அமைச்சரையே துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவின் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகனின் YSR காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வராகவும் ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வரானார்.

பவன் கல்யாண் முழுநேர அரசியலில் இறங்கி பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆளும் கூட்டணியில் உள்ள அமைச்சரையே அவர் விமர்சித்துள்ளது தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தகுதியற்றவராக இருப்பதாலேயே ஆந்திராவில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தலைவிரித்தாடுவதாக அவர் சாடியுள்ளார். இதுகுறித்து ஐதராபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ’’மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும். எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. தப்பு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும்.இல்லையென்றான் நானே ஏற்பேன்.அதற்காக நான் உள்துறை அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.

யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும். வாக்கு கேக்க மட்டும் மக்களிடம் வரக்கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும்’’ என பவன் கல்யாண் உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக விமர்சித்துள்ளது ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram