ABP News

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

Continues below advertisement

I.N.D.I.A கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறிய நிலையில், விஜயை அழைப்பது விஜய் மீது இருக்கும்  நம்பிக்கையிலா? அல்லது தங்கள் கூட்டணிமீது இருக்கும்  அவநம்பிக்கையிலா என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86வது பிறந்த நாள் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், விஜய் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் விருப்பமா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. 


அதற்கு பதில் அளித்த அவர்,”விஜய் மாநாட்டில் பேசிய உரை மதவாத சக்திகளுக்கு எதிராக இருந்தது.  எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஆனால் இந்த மதவாத சக்திகளை, இந்துத்துவ சக்திகளை அகற்ற வேண்டும் என்பதை அவர் முன்னெடுப்பாரானால் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் அவருக்கும் நல்லது அவரது கொள்கை கூட்டணிக்கும் நல்லது.  இதைத்தான் ஒரு இந்தியனாக என்னால் சொல்ல முடியும். ”என்று கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை இப்படி கூறியிருக்கும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திமுக கூட்டணி மீது உள்ள அவ நம்பிக்கையில்தான் செல்வப்பெருந்தகை இவ்வாறு பேசியிருக்கிறார என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் தலைவர் அண்ணன் செல்வப் பெருந்தகை.. தாங்கள் தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுக  கூட்டணியால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறாரா? விஜயை அழைப்பது விஜய் மீது இருக்கும்  நம்பிக்கையினாலா? அல்லது தங்கள்  2 INDI கூட்டணிமீது இருக்கும்  அவநம்பிக்கையினா லா ?”என்று கேட்டிருக்கிறார்.  இவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola