MK Stalin America plan Change | அமெரிக்க பயணத்தில் மாற்றம்? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! காரணம் என்ன?
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 16 நாள் சுற்றுப்பயணம் ஆக ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில், தற்போது அவருடைய ஷெட்யூலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் பின்னணியில் மிகப்பெரிய ஒரு பிளானை ஸ்டாலின் வைத்துள்ளதாகவும் தெரிகிறது..
ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னை விமானத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு திரும்புவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் 16 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கப் சுற்றுப்பயணம் தற்போது இன்னும் சில நாட்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்னும் நாட்களை அதிகரித்தால் அது விமர்சனங்களை அதிகமாக இன்று திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.
ஆனா இது முதலயே திட்டமிடப்பட்டது தான் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. அதன் காரணமாகவே ஒரு முக்கியமான ஹிண்டை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலின் தெரிவித்தார் என்று சொல்லப்படுகிறது.
அதுதான் முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னை சந்திக்க டைம் கேட்டு இருக்காங்க இப்போ நான் கொடுத்திருக்கிற நாட்களே போதாது என்று கருதுகிறேன், என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முதலிலேயே பயணத்திட்டத்தை அதிக நாட்கள் சொன்னால் அது தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று நினைத்த ஸ்டாலின், அமெரிக்கா சென்ற பிறகு அந்த தகவல்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துள்ளார்.
இதன் பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான் என்னவென்றால், நிர்வாக ரீதியாக உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்துவதே என்கின்றனர் சிலர். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், துணை முதல்வர் என்று அறிவிக்கப்படாத உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் போன்று வளம் வருகிறார்.
கட்சியின் முக்கிய முடிவுகளாக இருக்கட்டும், தமிழக அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் என அதிகாரிகள் தொடங்கி கட்சி நிர்வாகிகள் வரை அனைத்தும் உதயநிதி ஸ்டாலின் சுற்றியே சுழன்று வருகிறது.
இந்நிலையில்தான் இங்கே பெரிதாக எந்த சர்ச்சையும் வெடிக்காத பட்சத்தில் முதல்வர் ஸ்டாலினில் அமெரிக்க பயணம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஆனால் தற்போது வரை அது குறித்த இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், தமிழகத்தின் அரசியல் சூழலை கருத்து எடுத்துக் கொண்டு அது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த படுகிறது.