BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்பு

அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக-வை இணைக்கும் முயற்சியில் பாஜக தேசியத்தலைமை தீவிரம் காட்டிவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். 

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் அதிமுகவுடன் நட்புறவுடன் இருக்கும் ஒருவரை பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் அண்ணாமலையை  நீக்க வேண்டும் என்றும் பல கன்டிஷன்களை இபிஎஸ் போட்டதாக சொல்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேலை பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் அண்ணாமலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  மறுபுறம் அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்து சமாதனம் செய்யும் முயற்சியிலும் பாஜக தேசியத்தலமை ஈடுபட்ட வருகிறது.


இச்சூழலில் தான், அதிமுக கூட்டணி வேண்டாம் எனவும், அண்ணாமலை மாநில தலைவராக வேண்டும் எனவும் பாஜக சார்பில் பரமக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola