Arun IPS : “ரௌடிகள் வீடுகளில் வேட்டை என்கவுன்டருடன் நிற்காத ACTION.. அருண் IPS அதிரடி

Continues below advertisement

ரவுடிகளுக்கு அவர்கள் பானியிலேயே பாடம் கற்றுக்கொடுப்பேன் என காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இனி தினமும் இரண்டு ரவுடிகள் அதுவும் அவர்களது வீட்டுக்கே செல்லுங்கள்…என காவல் ஆய்வாளர்களுக்கு அவர் புதிய உத்தரவை பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளார்.

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் என பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின்  நடவடிக்கைகளை அதிதீவிரமாக கண்கானிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மறுவகைப்படுத்தப்பட்டு போலீசார் கண்கானிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் நான்கு மண்டலங்களாக டிஎஸ்பி தலைமையில் ரவுடிகளை கண்கானிக்க குழு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டு, ரவுடிகளுக்கு கிடைக்கப்பெறும் பொருளாதார மூலங்களை தடை செய்வதற்காக வழிமுறைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ரவுடிகளுக்கு புரியும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என முன்னதாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது சில புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரவுடிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று குற்ற செயல்களில் ஈடுபட கூடாதென எச்சரிக்கை விடுக்குமாறு காவல் ஆய்வாளர்களுக்கு அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம். மேலும் தினமும் இரண்டு ரவுடிகள் வீதம் அனைத்து ரவுடிகளின் வீடுகளுக்கும் சென்று கறாராக எச்சரிக்கை விடுக்குமாறு அவர் ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் எல்பிடபுல்யூ வாரண்ட் பெற்று தலைமறைவாக உள்ள ரவுகளை உடனடியாக கைது செய்யவும் நிபந்தனை ஜாமின் பெற்று வீட்டில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்கானிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரவுடிகளின் வாண்டட் லிஸ்ட்களை தயார் செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram