Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?
சில மனிதர்கள் நினைக்கிறார்கள் குடும்பத்தின் செல்வாக்கு மட்டும் போதும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் செப்டம்பர் 21, குடும்ப பலம், பண பலம், மீடியா பலம், மாநில பலம் இவை அனைத்தையும் மக்களின் பலம் வெல்லும் இன்று சொன்னதை செய்து காட்டி, இலங்கை அதிபர் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளார் ஏ கே டி என்று அழைக்கப்படும் அனுரகுமார திசநாயக்கா..
கடந்த தேர்தலில் வெறும் மூன்று சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற ஏ கே டியால் இந்த தேர்தலில் எப்படி ரணில் விக்கிரமசிங்கே சஜித் பிரேமதாசா ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிபராக முடிந்தது? அப்படி என்ன செய்தார் இந்த ஏக்கடி பார்க்கலாம்
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது 16 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது, உணவுக்குக் கூட சில இடங்களில் பஞ்சம் ஏற்பட்டது.. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராடினர். அப்போது அந்தப் போராட்டத்தில் முதல் வரிசையில் நின்று மக்களுடன் போராடி இலங்கை அரசுடன் சண்டை சேவல் தான் இந்த அனுரகுமார திசநாயக்க..
1968 ஆம் ஆண்டு இலங்கையின் அனுராதபுறா மாவட்டத்தில் தம்புடேகம்மா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் திசநாயக்க. தந்தை ஒரு கூலித் தொழிலாளி, தாயோ இல்லத்தரசி.. இப்படி எளிய குடும்பத்தில் பிறந்த ஏ கே டி, சிறுவயதிலிருந்தே மார்க்சிய லெனின்ஸ்ட் சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்..
திசாநாயக்க தம்புதேவன் காமெடி மகா வித்தியாலயா மற்றும் ஜம்பு தேகமே மத்திய கல்லூரியில் கல்வியை பயின்ற ஏ கே டி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் மாணவர் ஆக தேர்வானார். சிறுவயதிலிருந்தே ஜனதா விமுத்தி பெருமுன்னா கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஏ கே டி 1987இல் கட்சியில் இணைந்தார்.
கட்சிக்குள் படிப்படியாக உயர்ந்த ஏ கே டி, 2000 ஆவது ஆண்டு ஜேவிபியின் தேசியப்பட்டியில் இருந்து எம்பியாக தேர்வானார். நாடாளுமன்றத்தை தொடர்ந்து 2004ல் சுதந்திர கட்சியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட ஏ கே டி பாராளுமன்றத்திற்கும் தேர்வானார்.
2014 ஜேவிபி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் அனுரகுமார திசநாயக்கே.. இரண்டு விஷயங்களை செய்தார். முதலாவதாக பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசி அவர் கடந்த காலத்தில் எங்கள் கட்சியால் ஏற்பட்ட வன்முறைக்கு மனம் திறந்து இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அடுத்ததாக இலங்கையில் முக்கால் நூற்றாண்டாக இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில் அரசியல் கட்டமைப்பிலையே அடிப்படை மாற்றம் தேவை என்று முழங்கினார்.
2019 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஏ கே டி ஆர் வெறும் மூன்று சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
அதனால் தன்னுடைய ஆட்டத்தை மாற்ற நினைத்து அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் ஊழல் எதிர்ப்பு. இலங்கையில் அரசியல் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஊழல் கரை படிந்து இருப்பதாகவும், இது நாட்டையே அழித்து வருவதாகவும் தொடர்ந்து மக்களிடம் கர்ஜித்தார் ஏ கே டி..
தன்னை ஊழலுக்கு எதிரானவன் என்று புரொஜெக்ட் செய்த ஏ கேடிகள் இந்த தேர்தல் பிரச்சாரம் ஃபார்முலா நல்ல பலனை கொடுத்தது. இளைஞர்கள் பெருமளவில் ஏகேடி பக்கம் சாய்ந்தனார்.
மேலும் 2022ல் இலங்கை மக்கள் கடும் பொருளாதார சிக்கலில் நேரடியாக பாதிக்கப்பட்டனர். 16 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு எரிபொருள் தட்டுப்பாடு உணவு தட்டுப்பாடு விலையேற்றம் என எல்லாவிதமான சிக்கல்களையும் சந்தித்தனர்.
அப்போது சாதாரண மக்களுக்காக வீதியில் இறங்கி அவர்களுடன் தோல் நின்று போராடினார் ஏ கே டி.
இந்நிலையில்தான் இலங்கை பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைவராக பொறுப்பேற்றார் இவர். இத்தகைய சூழலில் தான் வெளிவந்து கொண்டிருக்கும் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார் அனுரகுமார திசநாயக்கா.
இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கும் விஷயம் என்னவென்றால் இலங்கையின் தென்பகுதி மட்டும் இல்லாமல் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளும் அனுரகுமாராவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இதன் மூலம் இளைஞர்கள் சிங்களர்கள் தமிழர்கள் என அனைத்து தரப்பினரும் முதல் முறையாக இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற ஒரே இலக்கை நோக்கி தங்களுடைய வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.