Annamalai Pressmeet : ஜெயலலிதாவை என்ன சொன்னேன்?குழம்பி போயி இருக்காங்க” அண்ணாமலை பரபர
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவாவாதி என்றும், அவர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு முதல் ஆளாக சென்றிருப்பார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியுள்ளதாவது:
ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இந்துத்துவம் என்பது மதம் சார்ந்த அடையாளம் அல்ல அது வாழ்வியல் முறை. அனைவரையும் அரவணைப்பதுதான் இந்துத்துவா.
1984 ஜூலை 24 ஆம் தேதி ஆர்டிக்கல் 370ஐ நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாதிட்டுள்ளார் ஜெயலலிதா. 1993இல் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 2003இல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அனைத்தையும் தற்போது அதிமுக'வினர் எதிர்த்து வருகிறது. இதுகுறித்து அதிமுகவனுடன் விவாதிக்க பிஜேபியினர் தயாராக உள்ளோம். இதன் அடிப்படையில் ஜெயலலிதா அவர்கள் இந்துத்துவா தான் என்று சொல்வது சரி.
ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கு முதல் ஆளாக மகிழ்ச்சியாக சென்றிருப்பார் என்று அவர் பேசியிருந்தார்.