Annamalai Slams DMK | காவலரை தாக்கிய விவகாரம் எங்கிருந்து துணிச்சல் வந்தது? திமுகவை விளாசிய அ.மலை

அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலரை மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம்.

அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola