TVK Vijay: தேறாத நடிகர் விஜய்! படபிடிப்பா? மக்களா? புலம்பி தவிக்கும் தவெகவினர்

மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு முழுவதும் விஜய் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் முடியப்போகிறது ஆனால் விஜய் இன்னும் தேர்தலுக்கான எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இச்சூழலில், விஜயின் சுற்றுப்பயணம் எப்போது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு முடிந்து விட்டது. கட்சி தொடங்கி முதல் மாநாடு, மாவட்டச்செயலாளார்கள் நியமனம், பொதுக்குழு என அடுத்தடுத்த நடவடிக்கைகளை தவெக மேற்கொண்டாலும் work from home அரசியல்வாதி, வீட்டில் இருந்து கொண்டே நாட்டை ஆள துடிக்கும் நபர் என்று தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனங்கள் அனைத்து கட்சிகளாலும் வைக்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை ஆனால் விஜய் இன்னும் மக்களை நேரில் வந்து சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது அதே கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அந்த கட்சி தயாராகி வருகிறது அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தவெக சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கான எந்த வேலைகளையும் செய்யவில்லை. தான் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் விஜய் பொதுமக்களை சந்திப்பார் என்று தகவல் வெளியானது.

கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கிறது. இன்னும் பூத் கமிட்டி அமைக்கவில்லை. மாவட்டச்செயலாளர்கள் கூட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் இருக்கின்றனர். எத்தனையோ கிராமங்களில் இன்னும் கட்சிக்கொடி கூட ஏற்றாமல் இருக்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணிகணக்குகளை முடித்து விட்டது ஆனால் தலைவர் விஜய் இன்னும் சூட்டிங் சூட்டிங் என்று இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவது என அக்கட்சியின் தொண்டர்களே முனுமுனுக்கின்றனர்.

முன்னதாக மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியானது. ஆனால், விஜய் படப்பிடிப்பிலே இன்னும் தீவிரமாக இருக்கிறார்.  இப்போது ஏப்ரம் மாதம் முடியப்போகிறது.ஆனால் விஜய் இன்னும் எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் மே மாதம் இறுதியில் முடியவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திரைப்படம் 2026 பொங்கல் அன்று வெளியாகும் படக்குழு அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஆகலாம். இதன் பிறகு ஜன நாயகன் ப்டத்தின் ப்ரோம்சன் நிகழ்ச்சி, ஆடியோ லாஞ்ச இதெல்லம் முடிவதற்குள் சட்டமன்ற தேர்தல் வந்து விடும். இப்படிப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தமிழ் நாடு விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola