
Annamalai | ”தலைவர் பதவி இல்லைனா? மொத்தமும் போச்சே” புலம்பும் அண்ணாமலை! | Amit Shah
டெல்லில் இருந்து பாஜக தலைவர்கள் யார் வந்தாலும் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோடி வந்த போது கிடைக்கவில்லை என்று அண்ணாமலை புலம்புவதாக சொல்கின்றனர். இப்போதே இப்படி என்றால் தலைவர் பதவி இல்லையென்றல் என்னை யார் மதிப்பா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தீர்த்திருக்கிறாரம் அண்ணாமலை.
கர்நாடகாவில் IPS அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தர். அடுத்த ஆண்டே தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அரசியல் களத்தில் திமுகவை கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்து வந்தார். இதனிடையே அவருடைய பதவிக்காலம் கடந்த வருடமே முடிவடைந்த நிலையில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே நான் பாஜக தலைவர் ரேசில் இல்லை என்று அண்ணாமலையே அறிவித்தார்.
இச்சூழலில் தான் கடந்த 6 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி அண்ணாமலையை கண்டெகொள்ளமல் இருந்தாக சொல்லப்படுகிறது. அதேபோல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவவும் அண்ணாமலையை கண்டுகொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.
அதேபோல், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அண்ணாமலைக்கு முன்வரிசையில் நயினார் நிற்கவைக்கப்பட்டது, மேடையில் இடம் கொடுத்தது என்று முழுக்க முழுக்க நயினாரே மோடியுடன் நெருக்கம் காட்டினார். அவர் தமிழக பாஜகவின் சட்டமன்ற தலைவர் அதோடு எம்.எல்.ஏ என்பதால் தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் அழுகாதா குறையில் இருக்கிறார்களாம்.
தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து டெல்லியில் இருந்து தமிழ் நாட்டிற்கு பாஜக தலைவர்கள் யார் வந்தாலும் தனக்குத்தன் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை மோடி வந்த போது தனக்கு கிடைத்து வந்த முக்கியத்துவத்தில் கால்வாசி கூட கிடைக்கவில்லை என்று தனக்கு வேண்டியப்பட்டவர்களிடம் விரக்தியில் அண்ணாமலை புலம்பி வருவதாக சொல்கின்றனர்.
இப்போதே தனக்கான மரியாதை குறைந்து வருகிறது தான் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டால் தன்னையார் மதிப்பார்கள் என்றும் அண்ணாமலை புலம்புவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.