Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!
தவெக தலைவர் விஜயை இழிவுபடுத்தும் நோக்கில் கூத்தடி என்று பேசிய MLA ஆளூர் ஷா நவாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.
நேற்றை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விசிக எம்எல்ஏ-வான ஆளூர் ஷா நவாஸ் ஒரு கூத்தாடி எப்படி திருமாவளவனை பற்றி பேசலாம் என கொந்தளிப்பாக பேசினார். அப்போது அதே விவாதத்தில் பங்கேற்று இருந்த தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சினிமா துறையினரை கூத்தாடி என கேவலமாக பேசியதாக சினிமா துறையினரும் தவெகவினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவனே ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நிலையில் அவரையும் ஆளூர் ஷாநவாஸ் விமர்சிக்கிறாரா என கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி,” கூத்தாடி.. எவ்வளவு திமிர் இவருக்கு.. இவர் வகிக்கும் கட்சி தலைவரே ஒரு படத்துல கூத்தாடி வேஷம் போட்டவரு தான்.. இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷானவாஸ் அவர்கள்.. இது திரை நடிகர்களை மட்டுமல்ல, நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவு படுத்தும் வார்த்தை..” என கூறியுள்ளார்.
ஷா நவாஸின் பேச்சை கண்டிக்க வேண்டுமென பதிவிட்டிருக்கும் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த்,”தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு முதுகெலும்பு ஒன்று இருந்தால் ஆளூர் ஷாநாவாஸின் இன் இந்த பேச்சை கண்டிக்கும். கூத்தாடுவது ஒன்றும் இழி செயல் அல்ல ! கூத்தாடிகள் இல்லையேல் இங்கே பலருக்கு மகிழ்ச்சி இல்லை !” என பதிவிட்டுள்ளார்.