Aadhav Arjuna: ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க நெருக்கும் விசிக - திமுக! ஆக்ஷனில் இறங்கிய திருமா
திமுகவை எதிர்த்து பேசிய ஆதவ் அர்ஜூனாவை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று விசிக சீனியர் லீடர்ஸ் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
”கொள்கைகளைப் பேசிய பல கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரைக்கும் மேடையில் ஏற்றவில்லை. 2026-க்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது.தமிழகத்தை கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கேட்டால் தவறு என்று சொல்கிறார்கள். எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம். வேங்கைவயல் பிரச்னை இன்றைக்கு வரைக்கும் தீர்க்க முடியாததாக இருக்கிறது. மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.” என்று திமுக கடுமையாக சாடினார் ஆதவ் அர்ஜூனா.
ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு விசிகவில் புயலை கிளப்பியது போல் திமுகவிலும் புயலை கிளப்பியுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டு அவர் இப்படி பேசியிருப்பதல் அவரை உடனே கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று திமுகவினர் போர்க்கொடி தூக்கிய சூழலில், எங்கள் கட்சியில் யாரையும் உடனோ நீக்கிவிட மாட்டோம். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் கருத்து பற்றி விளக்கம் கேட்கப்படும். பின்னர் அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் “என்று திருமாவளவன் கூறினார்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவை இனிமேல் கட்சியில் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று விசிக சீனியர் தலைவர்கள் திருமாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனாவிற்கு இன்று நோட்டிஸ் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது