அதிமுகவுடன் கூட்டணி கிடையாது விஜய் அதிரடி அறிவிப்பு நான்தான் முதலமைச்சர் | Edappadi Palanisamy | Vijay | ADMK TVK Alliancee |
தவெக அதிமுகவுடன் கூட்டணி இல்லவே இல்லை நானே முதலமைச்சர் வேட்பாளர்.. தவெக தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் எந்த சமரசமும் கிடையாது... என்று விஜய் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக என கூட்டணி பலமாக உள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக ஒரு பக்கம் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், மறுமுனையில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இந்த தேர்தலில் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உண்டாகியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதலே இந்த பரபரப்பு இருந்தாலும் திமுக மற்றும் பாஜக தனது எதிரி என்று அவர் கூறினாலும் அவர் அதிரடி அரசியலை முன்னெடுக்காமலே தற்போது வரை உள்ளார். விஜய்யை தங்கள் பக்கம் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விஜய் நிருபர் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும், தவெக தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் எங்களுக்கு எந்த சமரசமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராக வரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. பாஜக-வை தங்கள் கொள்கை எதிரி என்று தி்ட்டவட்டமாக தெரிவித்து வரும் விஜய், அந்த பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். அவர் தற்போது அளித்துள்ளதாக வெளியாகியுள்ள பேட்டியிலும் இதே தகவல் உறுதியாகியுள்ளது.
அதேசமயம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் தவெக மிகவும் திட்டவட்டமாக உள்ளது. ஆனாலும், விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அதிமுக 40 தொகுதிகள் வரை தர தயாராகி வருவதாக கூறப்படுகிறது. விஜய் எதிர்பார்த்த சீமான், திருமாவளவன் ஆகியோர் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தனது கூட்டணியில் இணைக்க விஜய் தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் எந்த கட்சியினரும் கூட்டணி வைக்காத சூழலில் தேர்தல் களத்தில் அவருக்கு அது கைகொடுக்குமா? அல்லது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் சமரசம் செய்து அதிமுக கூட்டணிக்கு இறங்கிப்போவாரா? என்பது அடுத்தடுத்த மாதங்களிலேதான் தெரிய வரும்.